சனி, 11 செப்டம்பர், 2021

முன்னவர் விருது


எமது வேளாண் அறிவியல் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி, வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் புதுதில்லி, இன்று (11.09.2021) புதுச்சேரியில் நிகழ்ந்த தமிழ்ப் பயிற்றுமொழி மாநாட்டில் "முன்னவர் (Fellow)" என்னும் விருதினை அளித்துள்ளது. இவ்விருதினை தெலங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்  மேதகு மரு. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வழங்கினார்கள். இவ்விருதினை வழங்கிச்சிறப்பித்த வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்திற்கு நனி நன்றி!.


 









வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் முன்னவர் விருது

புதுதில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், முன்னவர் (Fellow) என்னும் விருதினை எனக்கு நாளை (11.09.2021) அளிக்கவுள்ளது. இவ்விருதினை தெலங்கானாவின் மேதகு ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் அவர்களிடம் இருந்து நான் பெற உள்ளேன்.

வியாழன், 9 செப்டம்பர், 2021

மணிமேகலை அறக்கொற்றம் வழங்கும் முனைவர். இரா.பாவேந்தன் அறிவியல் தமிழ்ச்சுடர் விருது

 

 

மணிமேகலை அறக்கொற்றம் வழங்கும் முனைவர். இரா.பாவேந்தன் அறிவியல் தமிழ்ச்சுடர் விருது


இறைவாழ்த்து : திருமதி.பிரபாவதி அவர்கள்


வரவேற்புரை: மரு. இரா. இளவஞ்சி, எம்பி.பி.எஸ்., எம்.டி., நிறுவனர், மணிமேகலை அறக்கொற்றம், தமிழ்நாடு.


அறிவியல் தமிழின் எதிர்காலவியல் : முனைவர் தமிழ்ப்பரிதி மாரி அவர்கள்
உதவிப்பேராசிரியர் இதழியல், மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636011.


சிறப்பு அழைப்பாளர்: முனைவர் சி.தியாகராசன் அவர்கள் பேராசிரியர் & துறைத்தலைவர், அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613010.


ஏற்புரை: அறிவியல் தமிழ்ச்சுடர் விருது பெறும் முனைவர். கி.ஜெகதீசன் அவர்கள் உதவிப்பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிமையம், தஞ்சாவூர் - 600 403.


நன்றியுரை: தமிழ்த்திரு. தாமஸ் ஸ்டீபன், செயலாளர், மணிமேகலை அறக்கொற்றம், தமிழ்நாடு.


நாள்: 19.09.2021 மாலை 5மணி முதல் 7 மணிவரை இடம்: இக்சா அரங்கம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை


அனைவரும் வருக!