திங்கள், 4 மார்ச், 2013


பெரியார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் 

தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி சிறப்புரையாற்றுகின்றார்
திங்கள், மார்ச் 04, 2013. பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக் கல்லூரி, கடந்த 01.03.2013 முதல் மாசிலாபாளையத்தில் தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாமினை ஒருங்கிணைத்துள்ளது. தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியுள்ள சூழலில் மாணவர்களுக்கு தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா விழிப்புணர்வு, பயிற்சி தேவையைக் கருத்தில் கொண்டு, பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் மோ. தமிழ்மாறன் வகையில் தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினிப் பயிலரங்கு நிகழ உறுதுணை செய்தார்.
பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சியை அளிக்கின்றார்
03.03.2013 அன்று மாசிலாபாளையத்தில் , தேசிய நாட்டுநலப்பணித்திட்ட முகாமில், பிற்பகல் 2.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை, அரசு தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்த தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினிப் பயிலரங்கில் 200 மாணவர்களும் ஊர்ப்பொது மக்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வில், முனைவர் கணேசன் தொடக்க உரை ஆற்றினார்.
பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பாடல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ்க்கணினி பயிலரங்கில் பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை நிகழ்த்தி, மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி அளித்தார்.
பெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியில், தேசிய நாட்டுநலப்பணித்திட்டத்தில் உள்ள 4 அலகுகளின் மாணவர்களும் பங்கேற்றனர். முனைவர் கணேசன், முனைவர் சந்திரன், திருமதி சத்யா, முனைவர் விஜயராணி ஆகிய பேராசிரியர்கள் இம்முகாமினை ஒருங்கிணைத்தனர். ஊரக மாணவர்களிடையே விக்கிப்பீடியா விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்நிகழ்வு தமிழ் விக்கி பயணத்தில் நல்லொருத்தொடக்கம் ஆகும்.

  • முனைவர் கணேசன் தொடக்க உரை ஆற்றுதல்
  •  
  • தமிழ் விக்கிப்பீடியா பயிரங்கப் பங்கேற்பாளர்கள்
  •  
  • பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தலை விளக்குகின்றார்
  • புதன், 6 பிப்ரவரி, 2013

    வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

    Campus Drive @ Periyar University

    மேலும் விவரங்களுக்கு: பெரியார் பல்கலைக்கழகத்தின் வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் புவியமைப்பியல் துறை பேராசிரியர் முனைவர் இரா.வெங்கடாசலபதி அவர்களை அலுவலக நேரத்தில்  0427-2345766, 2346269, 2345520 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    வியாழன், 31 ஜனவரி, 2013

    தமிழ்ப்பரிதி: திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் நா. வா. நாள...

    தமிழ்ப்பரிதி: திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் நா. வா. நாள...: வெள்ளி, பிப்ரவரி, 01, 2013. திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி)யின் நாட்டார் வழக்காற்றியல் துறையும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்...

    திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் நா. வா. நாள்

    வெள்ளி, பிப்ரவரி, 01, 2013. திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி)யின் நாட்டார் வழக்காற்றியல் துறையும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையமும் நெல்லை ஆய்வுக்குழுவும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து, பேராசிரியர் நா. வானமாலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நிகழ்த்தும் "நா. வா. நாள்"  என்னும் நிகழ்வு, பிப்ரவரி, 01, 2013 அன்று தூய சவேரியார் கல்லூரியின் லொயோலா அரங்கில் காலை 9.30 மணி முதல்  நிகழ உள்ளது. காலை 9.30 மணிக்கு ஒயிலாட்ட அரங்கேற்றத்துடன் நிகழ்வை தொடங்கி வைப்பவர் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒயிலாட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பர், ஒயிலாட்ட பயிற்சியாளர் கலைமாமணி கைலாசமூர்த்தி. காலை 10.00 மணிக்கு சொற்பொழிவு அமர்வு, தூய சவேரியார் கல்லூரி அருள்திரு முனைவர் ஆ. ஜோசப் தலைமையில் நிகழ உள்ளது. தமிழில் அச்சேறிய இதழ்கள் என்னும் பொருண்மையில், புதிய தலைமுறை கல்வியின் இணை ஆசிரியர் பொன். தனசேகரன் உரை நிகழ்த்த உள்ளார்.

    திங்கள், 28 ஜனவரி, 2013

    தமிழ் நாணயங்கள்

    தமிழ் நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள்





    வியாழன், 24 ஜனவரி, 2013

    தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு!

     தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதன் வரலாற்று ஆவணங்களை பெருஞ்தச்சன் தோழர் தென்னன் மெய்ம்மன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு!

    ஞாயிறு, 20 ஜனவரி, 2013

    முந்நீர் விழவு: நீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம்



    பூவுலகின் நண்பர்கள் மற்றும் என்விரோ கிளப், லயோலா கல்லூரி ஒருங்கிணைக்கும் முந்நீர் விழவு என்னும் நீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம் ஜனவரி 26, சனிக்கிழமை, அன்று காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னையிர் நிகழ உள்ளது. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவும் அருட்தந்தை முனைவர். ஆல்பர்ட் வில்லியம், செயலாளர், இலயோலா கல்லூரி முன்னிலை வகிக்கவும் இந்தியப் பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த இரா. நல்லக்கண்ணு சிறப்புரையாற்றவும் கு. வி. கிருஷ்ணமூர்த்தி முந்நீர் விழவு குறித்து அறிமுகம் செய்யவும் உள்ளனர். நிகழ்வில் சுற்றுச்சூழல் குறித்த நூல்கள் வெளியிடப்பெற உள்ளன.


    இரண்டாம் நாள் நிகழ்வில், பேராசிரியர். லால் மோகன், முனைவர் தீபச் சாமுவேல், ஒரிசா பாலு, பேராசிரியர். ஜனகராஜன், பாமயன், கி. வரதராஜன், திருவாரூர், அரச்சலூர் செல்வம்,  பொறிஞர் இளங்கோவன், பொறிஞர் சா. காந்தி, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், எம். ஆர். பிரபாகரன் ஆகியோர் கருத்துரை  வழங்கவும் உள்ளனர். நிகழ்வில் பொது மக்கள் விவாத அரங்கு, மக்கள் நீர்க் கொள்கை வரைவு உருவாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரியச் சிறு தானிய உணவு விருந்தோடு புத்தகச்சந்தையு இயற்கை உணவுப்பொருள் காட்சியும் முந்நீர் குறித்த ஒளிப்படக் கண்காட்சியும் நிகழ உள்ளன.


    தொடர்புக்கு: பூவுலகின் நண்பர்கள், 81442 55588, info@poovulagu.org

    2500-க்கும் மேற்பட்ட மின்னூல்களுக்கு.. Access above 2500 Tamil Books



    மதிப்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம்,

    தமிழகம்.வலை தளம், கடந்த 7 ஆண்டுகளாக, உலகளாவிய தமிழ் வளங்களைத் தொகுத்து செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். தமிழகம்.வலை தளத்தில் தற்போது, சங்கத்தமிழ், அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய, தமிழக அரசு நாட்டுடைமையாக்கி நூல்கள் மற்றும் க.அயோத்திதாசபண்டிதர், ஞா.தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய பேரறிஞர்கள் யாத்த நூல்கள் என, 2500-க்கும் மேற்பட்டமின்னூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. தமிழ் மின் நூலகத்தினைப் பார்வையிடவும் பயிலவும் பயன்படுத்தவும் (தங்கள் வலைதளம்,இதழ்கள், சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் வாயிலாக) பகிரவும் அன்புடன் விழைகிறேன்.

    அன்பன்,

    மா. தமிழ்ப்பரிதி

    +91- 97509 33101

    தமிழகம் மின்னூலகம்

    நாட்டுடைமையாக்கப் பெற்ற நூல்கள்

    சனி, 19 ஜனவரி, 2013

    இந்திய சினிமா நூற்றாண்டு, மக்களும் மரபுகளும்: சர்வதேச ஆவணப்பட விழா


    திருநெல்வேலி, சனவரி 20. தூய சவேரியார் கல்லூரி(தன்னாட்சி)யின் நாட்டார் வழக்காற்றியல் துறையும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையமும் சித்திரமும் கைப்பழக்கம் இயக்கமும் இணைந்து நிகழ்த்தும் இந்திய சினிமா நூற்றாண்டு மக்களும் மரபுகளும் சர்வதேச ஆவணப்பட விழா சனவரி 21, 22 ஆகிய நாட்களில் தூய சவேரியார் கல்லூரி(தன்னாட்சி)யின் கௌசானல் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 6 வரை நிகழ உள்ளது.

    இந்நிகழ்விற்கு தூய சவேரியார் கல்லூரி அருள்திரு முனைவர் ஆ. ஜோசப் தலைமை தாங்கவும் நாட்டார் வழக்காற்றியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் நா. இராமச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தவும் உள்ளனர். இந்நிகழ்வில் முனைவர். ஆ. தனஞ்செயன் எழுதிய ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும் என்னும் நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் வெளியிடவும், தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் அருள்திரு பிரிட்டோ வின்சென்ட்   நூலை பெற்றுக்கொள்ளவும், நூலறிமுகத்தை ஆவணப்பட இயக்குநர் கே.பி. கதிரவவேல் வழங்கவும் உள்ளனர்.

    இந்நிகழ்வில், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் அருள்திரு முனைவர். அ. ஆரோக்கியசாமியும் நியூ செஞ்சுரி புக் ஹவுசின் நிருவாகி கிருஷ்ணமூர்த்தி கருத்துரை வழங்கவும்  நாட்டார் வழக்காற்றியல் துறையின் துறைத்தலைவர் முனைவர். ஆ. தனஞ்செயன் நன்றியுரைக்கவும் உள்ளனர்.

    ஆவணப்பட திரையீட்டின் போது நிகழவுள்ள விவாதத்தில் முனைவர் சகாயராஜ், பேராசிரியர் பெர்னார்ட் சந்திரா எழுத்தாளர் சிவசங்கர், முனைவர் மணிவண்ணன், பேராசிரியர் அமலநாதன், பேராசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் இராதா, பேராசிரியர். ஜெய் சக்திவேல், ஆய்வாளர் சாந்தினி சாரா, பேராசிரியர் புருஷோத்தமன், முனைவர். சாந்தி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை நாட்டார் வழக்காற்றியல் துறையைச்சார்ந்த முனைவர் ஜே. ஜோசப் அந்தோணி ராஜ், பேராசிரியர் பீட்டர் ஆரோக்கியராஜ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தைச்சார்ந்த முத்துராஜா மற்றும் சித்திரமும் கைப்பழக்கம் இயக்கத்தைச்சார்ந்த கே.பி. கதிரவவேலும் ஒருங்கிணைக்க உள்ளனர். 

    நிகழ்ச்சி தொடர்பிற்கு: 9443178459, 9994272735, 9789191711, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையமும்: 0462 2561932.