புதன், 21 செப்டம்பர், 2016

குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா

குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் 12.09.2016 அன்று தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் சார்பில், காலை 11 மணியளவில் கணித்தமிழ்ப்பேரவையை தொடங்கப்பட்டது. 
 
பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதியன் சிறப்புரை

இந்நிகழ்விற்கு இக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் எம்.கே மாலதி வரவேற்பு உரையாற்றினார். கணித்தமிழ்ப்பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி கணித்தமிழ்ப்பேரவையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார் . 
 
பேராசிரியர் முனைவர் எம்.கே மாலதி வரவேற்புரையாற்றுதல்

மாணவர்கள் தங்கள் துறை சார்ந்து கணித்தமிழ் ஆய்வுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் தேவை, அலைபேசி, கணிப்பொறிகளில் தமிழ் உள்ளீட்டின் தேவை, இணையப் பரப்பில் தமிழின் நிலை, அவற்றினை வலுப்படுத்தும் உத்திகள், விக்கியூடகத்திட்டங்களில் பங்களித்தல், கட்டற்ற மென்பொருட்களின் பயன்பாடுகள், பொது மக்களுக்கு கணித்தமிழ் விழிப்புணர்வூட்டல், கல்லூரிதோறும் 'கணித்தமிழ்' திருவிழாவை நடத்துதல், கணித்தமிழ் சார்ந்து மாணவர்களுக்கானப் போட்டிகளை நடத்துதல், மாணவர்கள் இணைய இதழை தமிழில் நடத்துதல், அலைபேசி செயலிகளை தமிழில் உருவாக்க வேண்டியதன் தேவைகளை விளக்கி பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி சிறப்புரையாற்றினார் .

குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜே. ஹெலன் செயல்திறன்களின் தகவல் தொகுப்பினை வழங்கினார்.கணித்தமிழ் சார்ந்து நடத்தப்பெற்ற பல்வகையானப் போட்டிகளுக்கானப் பரிசுகளை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி வழங்கினார். இந்நிகழ்வில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் கணித்தமிழ்ப்பேரவையின் மாணவச் செயலர் ம.வைஷாலி நன்றியுரை வழங்கினார்.