புதன், 21 செப்டம்பர், 2016

குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா

குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் 12.09.2016 அன்று தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் சார்பில், காலை 11 மணியளவில் கணித்தமிழ்ப்பேரவையை தொடங்கப்பட்டது. 
 
பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதியன் சிறப்புரை

இந்நிகழ்விற்கு இக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் எம்.கே மாலதி வரவேற்பு உரையாற்றினார். கணித்தமிழ்ப்பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி கணித்தமிழ்ப்பேரவையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார் . 
 
பேராசிரியர் முனைவர் எம்.கே மாலதி வரவேற்புரையாற்றுதல்

மாணவர்கள் தங்கள் துறை சார்ந்து கணித்தமிழ் ஆய்வுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் தேவை, அலைபேசி, கணிப்பொறிகளில் தமிழ் உள்ளீட்டின் தேவை, இணையப் பரப்பில் தமிழின் நிலை, அவற்றினை வலுப்படுத்தும் உத்திகள், விக்கியூடகத்திட்டங்களில் பங்களித்தல், கட்டற்ற மென்பொருட்களின் பயன்பாடுகள், பொது மக்களுக்கு கணித்தமிழ் விழிப்புணர்வூட்டல், கல்லூரிதோறும் 'கணித்தமிழ்' திருவிழாவை நடத்துதல், கணித்தமிழ் சார்ந்து மாணவர்களுக்கானப் போட்டிகளை நடத்துதல், மாணவர்கள் இணைய இதழை தமிழில் நடத்துதல், அலைபேசி செயலிகளை தமிழில் உருவாக்க வேண்டியதன் தேவைகளை விளக்கி பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி சிறப்புரையாற்றினார் .

குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜே. ஹெலன் செயல்திறன்களின் தகவல் தொகுப்பினை வழங்கினார்.கணித்தமிழ் சார்ந்து நடத்தப்பெற்ற பல்வகையானப் போட்டிகளுக்கானப் பரிசுகளை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி வழங்கினார். இந்நிகழ்வில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் கணித்தமிழ்ப்பேரவையின் மாணவச் செயலர் ம.வைஷாலி நன்றியுரை வழங்கினார்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

விக்கிமேனியா 2016, எசினோ லாரியோ (Wikimania Esino Lario)




அசஃபுடன்

சூன் 22-26 இத்தாலியிலுள்ள எசினோ லாரியோவில் நடைபெற்ற விக்கிமேனியா பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்றேன். எனக்கு முழு நிதி நல்கை அளிக்கப்பெற்று இருந்ததினால் பங்கேற்றேன்.

என்னுடன் தமிழ் நாடு கட்டற்ற மென்பொருள் இயக்கத்தைச்சார்ந்த திரு. சிபி இந்நிகழ்வில் பங்கேற்றார். உலக அளவில் செயல்பட்டு வரும் விக்கிப்பீடியர்களைச்சந்திக்கும் வாப்புக் கிடைத்தது. 

இந்நிகழ்வில் வங்காள விக்கி நண்பர்களின் எண்மியப் பணி வியப்பில்ஆழ்த்தியது. திரு.சதீப் கில் அவர்களின் பஞ்சாபி விக்கிப் பணிகள் கவனிக்கத் ஒன்றாகும். அவருடைய விரைவுத்தன்மை எண்ணத்தக்கது. அர்மேனியாவில் இருந்த வந்திருந்த அறம் என்பவர் அறம் என்பதின் அர்மேனிய விளக்கம் மிடுக்கு என்றார். எண்மிய நூலகம் குறித்து பல அரிய செய்திகளை அறிந்தேன்.
பின்னால் ஆல்ப்சு

ஒளிப்படப்பயிற்சி
 இந்த நிகழ்வின் ஒளிப்படங்கள், படவில்லைகள் குறித்த அழகானப்பயிற்சி அளிக்கப்பெற்றது. இன்னும் குறிப்பாகச்சொல்ல வேண்டுமென்றால் பனோரமா என்னும் நீள்படக்காட்சிகளின் தொகுப்புப்பணிகள் குறித்து சிறப்பா நேரிடைப்பயிற்சியை அளித்தார்கள். ஆரத்தழுவு என்ன மென்பொருள் (http://hugin.sourceforge.net/) பற்றி நல்லதொரு அறிமுகம் கிடைத்தது.
கோமோ ஏரி (நீல ஏரி)
 எசினோ லாரியோ: வியப்பில் ஆழ்த்தும் தூய்மையான மலைப்பகுதி எங்கெங்கும் பசுமைக்காடு. கோமோ என்னும் ஏரியைப் பார்த்து வியப்புற்றேன்; ஒரு குப்பைகூலத்தைக் கூட எங்கும் காணவியலா, தெளிவான நீர். நீலக்கடல் என்பார்களே அதைப்போல இது நீல ஏரி. இந்த கருத்தரங்களில் ஒளிப்பட, காணொலி நுட்பங்கள் சிலவற்றைக் கற்கும் வாய்ப்பு கிட்டியது. பயிற்சிக்கென அணியப்படுத்தப்பட்டிருந்த வகுப்புகள் சிறப்பான ஒன்றாகும்.
கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்குப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜிம்மி வேல்ஸ், கதரின்
 கருத்தரங்கில் மிகச்சிறந்த உரை ஜிம்மி வேல்ஸ் உடையது. நான் இந்த உலகில் நாடுகள், மொழிகள், பண்பாடுகளுகு இடையே பாலங்களை அமைக்க விரும்புகின்றோம். சுவர்களை அல்ல என்றார்; அரங்கம் அதிர்ந்தது. ஜிம்மி வேல்ஸ் அவர்களின் உரை எழுப்பிய அதிர்வலைகளை உலகம் உணரும்.
விக்கி ஆசியவியலாளர் சந்திப்பு
விக்கி ஆசியவியலாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்தியா, வங்கம், சப்பான் நண்பர்களிடையே நல்லதொரு அறிமுகம் கிடைத்தது. எப்படி இணைந்து செயல்படலாம் என்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆகத்து 5-7 இல் நிகழவுள்ள இந்திய விக்கிப்பீடிய கருதரங்கில் அடுத்த சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை மொழிகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டது.
எசினொ லாரியோவின் கட்டடங்கள்
 எசினோ லாரியோவின் கட்டடங்களைக் குறித்து தனியாகவே ஆராய, கலந்துரையாட வேண்டும். எங்கெங்கும் பூசப்படாத கட்டடங்கள். மிக எளிய ஆனால் அழகியலை அள்ளித்தெளிக்கும் அழகு வியப்பின் துளிகள். மரக்கட்டடங்களும், கூரை வீடுகளும் சிறப்பானவை.
எசினொ லாரியோவின் கட்டடங்கள்
 குறுகிய தெருக்களாக இருந்தாலும், நீர் உறிஞ்சும்படியான அமைப்பினைக் காணமுடிகின்றது. சாலைகள் சாய்கோணத்தில் இருப்பதினால் மிக நல்ல உடற்பயிற்சி. காலை உணவு ஓரிடத்தில், மதிய உணவு ஒரிடத்தில், இரவு உணவு ஓரிடத்தில், கருத்தரங்கம் பல இடங்களில் என அந்த நகரமே விக்கி நகரமானது.
மதிப்பிற்குரிய ஜிம்மி வேல்சுடன்
 மதிப்பிற்குரிய ஜிம்மி வேல்சுஸ் அவர்களுடன் நான் எடுத்துக்கொள்ளும் மூன்றாவது விக்கிமேனியா ஒளிப்படம் இது. அவருடைய ஒவ்வொரு ஒளிப்படத்திலும் மிக எளிய அழகிய புன்னகையைக் காணலாம். அறிவுப்பரப்பலின் ஆணிவேரன இவரின் பணி உலகெங்கும் பரவ வேண்டும்.
அழகிய மலைகள்
 எசினோ லாரினோ ஒரு மலை நகரம் என்பதினால் மலைக்க வைக்கும் மலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல படங்களும் பாடங்களும் கிடைத்தன. இந்நகர மக்களின் சூழியல் விழிப்புணர்பு நாம் கற்க வேண்டிய ஒன்று.
கோமோ ஏரி
 எசினோ லாரியோவில் இருந்து வெரைனாவிற்குச் சென்று அங்கிருந்து கோமா ஏரியைக்கடக்கும்போது அட என்ன சிறப்பான ஏரி, அதன் பாதுகாப்பு.
உள்ளூர்ப்போக்குவரத்திற்கு ஒரு தொடர்வண்டி
 கோமோ ஏரிக்கரையில் சுற்றுலா சுவைஞர்களுக்கான ஊர்தி, அழகிய, எளிய ஒன்று.
கோமோ ஏரியின் காட்சி
 சொற்களால் சொல்லமுடியா அழகுடன் நீலமாய் நம்மை வியப்பில் ஆழ்த்தியது கோமோ ஏரி. ஒரு நெகிழிக்குப்பையையும் காண முடியவில்லை. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெரும்வியப்பில் ஆழ்த்தியது. மலையையும் மணிநீரையும் நாம் திருக்குறளில் மட்டுமே வைத்திருக்கின்றோம் என்ற ஆதங்கம் ஏற்பட்டது.
நண்பருடன்
 இந்த நிகழ்வில் பல நண்பர்களுடன் நட்பு கிடைத்தது. பல உலகளாவிய நண்பர்களுடன இச்சந்திப்பு மிக மகிழ்வான ஒன்றாகும். பன்னாட்டு விக்கி முனைப்புகளை அறிய முடிந்தது.
எங்கெங்கும் மலர்கள்
 இத்தாலியில் என்னை மிக க் கவர்ந்தது மலர்களாகும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மலர்கள்..மனதைக் கவரும் மலர்கள். மிகப்புதுமையான முறையில் வீடுகளில் மலர்த்தொட்டிகளை வைத்துப் பராமரிக்கும் அழகு சிறப்பான ஒன்றாகும்.
நிறைவு விழாவில்..
நிறைவு விழா நிறைவான ஒன்றாகும். உள்ளூர் மக்களுன் நிகழ்வில் பங்கேற்றனர். எங்கெங்கும் இத்தாலின்; ஆங்கிலத்தின் பயன் குறைவாகவே உள்ளது. நூறு விழுக்காடு இத்தாலியன் மொழியினைப் பயன்படுத்துகின்றனர். தெருக்களில் இத்தாலியன் மட்டுமே. தமிழகத்தை ஒரு கணம் நினைத்தால் வருத்தமாக இருக்கின்றது.