வியாழன், 29 ஜூலை, 2021

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, கணித்தமிழ் பேரவை நிகழ்வுகள்

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் கணித்தமிழ் பேரவை சார்பில் 30.07.2021 முதல் ஒரு வாரத்திற்கு பிற்பகல் 4 மணிக்கு கணித்தமிழ் உரைகளை வழங்க உள்ளேன். ஆர்வமுள்ளோர் பங்கேற்க அழைக்கிறேன்.
கூகுள் இணைப்பு:
https:meet.google.com/pqb-xpnb-gwx


ஞாயிறு, 18 ஜூலை, 2021

முனைவர் இரா. பாவேந்தன் நினைவு விருது அறிவிப்பு

 

                   முனைவர் இரா. பாவேந்தன் (13 ஏப்ரல், 1970 - 20 சூலை, 2019)

 அறிவியல் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் இறுதிவரைப் பாடுபட்ட அறிவியல் தமிழ் அறிஞர், முனைவர் இரா. பாவேந்தன். அனைத்துத் துறைகளிலும் தமிழ் மேன்மையுற வேண்டும் அதிலுங்குறிப்பாக அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்து தமிழ் பீடுற வேண்டும் என்று உழைத்திட்டவர்; இவரின் அறிவியல் தமிழ்க்கனவைச் செயலாக்கும் வகையில் 2021முதல் அவரின் நினைவு நாளன்று அறியல் தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆய்வாளர் ஒருவருக்கு "அறிவியல் தமிழ்ச்சுடர்" என்னும் விருதினை அளித்திட இவரின் தங்கை மருத்துவர் இரா. இளவஞ்சி அவர்கள் அளிக்க உள்ளார்.

    • "அறிவியல் தமிழ்ச்சுடர்" விருதுடன் ரூ. 10 ஆயிரம் வழங்கப்பெறும்.
    • அறிவியல் தமிழை வளப்படுத்தும் பணிகளை மேற்கொண்டோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
    • அறிவியல் தமிழ் நூல்களை எழுதியவர்கள், அறிவியல் தமிழ் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்கள், அறிவியல் தமிழ் சார்ந்த பரப்புரைப்பணிகளை மேற்கொண்டவர்கள், கணித்தமிழின் மேம்பாட்டிற்கு உழைத்தவர்கள், கணித்தமிழ் பரப்புரைகளை முன்னெடுத்தவர்கள் ஆகியோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
    • இவ்விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களைப்பற்றிய விவரங்களையும் அறிவியல் தமிழ் சார்ந்த செயற்பாடுகளின் விவரங்களையும் அதற்குரிய ஆவணங்களின் படிகளையும் vanjidr1976@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்
    • விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.07.2021.
    • ஐயங்களுக்கு +91-7299397766 எனும் எண்ணில் அழைக்கலாம்.