திங்கள், 27 டிசம்பர், 2021
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? முனைவர் இரா. சுப்பிரமணி
சனி, 11 செப்டம்பர், 2021
முன்னவர் விருது
எமது வேளாண் அறிவியல் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி, வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் புதுதில்லி, இன்று (11.09.2021) புதுச்சேரியில் நிகழ்ந்த தமிழ்ப் பயிற்றுமொழி மாநாட்டில் "முன்னவர் (Fellow)" என்னும் விருதினை அளித்துள்ளது. இவ்விருதினை தெலங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் மேதகு மரு. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வழங்கினார்கள். இவ்விருதினை வழங்கிச்சிறப்பித்த வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்திற்கு நனி நன்றி!.
வெள்ளி, 10 செப்டம்பர், 2021
வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் முன்னவர் விருது
வியாழன், 9 செப்டம்பர், 2021
மணிமேகலை அறக்கொற்றம் வழங்கும் முனைவர். இரா.பாவேந்தன் அறிவியல் தமிழ்ச்சுடர் விருது
மணிமேகலை அறக்கொற்றம் வழங்கும் முனைவர். இரா.பாவேந்தன் அறிவியல் தமிழ்ச்சுடர் விருது
இறைவாழ்த்து : திருமதி.பிரபாவதி அவர்கள்
வரவேற்புரை: மரு. இரா. இளவஞ்சி, எம்பி.பி.எஸ்., எம்.டி., நிறுவனர், மணிமேகலை அறக்கொற்றம், தமிழ்நாடு.
அறிவியல் தமிழின் எதிர்காலவியல் : முனைவர் தமிழ்ப்பரிதி மாரி அவர்கள்
உதவிப்பேராசிரியர் இதழியல், மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636011.
சிறப்பு அழைப்பாளர்: முனைவர் சி.தியாகராசன் அவர்கள் பேராசிரியர் & துறைத்தலைவர், அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613010.
ஏற்புரை: அறிவியல் தமிழ்ச்சுடர் விருது பெறும் முனைவர். கி.ஜெகதீசன் அவர்கள் உதவிப்பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிமையம், தஞ்சாவூர் - 600 403.
நன்றியுரை: தமிழ்த்திரு. தாமஸ் ஸ்டீபன், செயலாளர், மணிமேகலை அறக்கொற்றம், தமிழ்நாடு.
நாள்: 19.09.2021 மாலை 5மணி முதல் 7 மணிவரை இடம்: இக்சா அரங்கம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை
அனைவரும் வருக!
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021
ourdictionary.in | தமிழ் அகராதிகளின் ஒன்றியம் | தமிழ் அகரமுதலிகளின் ஒன்றியம் | தமிழ்ப்பேழை
![]() |
அன்புடன்,
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
+91-7299397766
tamil@parithi.org
mydictionary.in
» அருங்கலைச்சொல் அகரமுதலி
» ஆட்சிச் சொல்லகராதி
» வணிகத் தொடர்பான சொற் பட்டியல்
» கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி
» 108 ஆடலியக்கத் தமிழ்ப்பெயரீடும் அமைவுகளும்
» அகநானூற்று அகராதி
» எண்ணியல் அகராதி
» வெற்றி அகராதி
» வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி
» கலைச்சொல் அகராதி - கால்நடை வளம்
» கலைச்சொல் அகராதி - மீன் வளம்
mydictionary
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021
அறிவியல் தமிழ்ச்சுடர் விருது அறிவிப்பு
முனைவர் இரா. பாவேந்தன் நினைவேந்தல்
அறிவியல் தமிழ்ச்சுடர் விருது அறிவிப்பு
சனி, 14 ஆகஸ்ட், 2021
தமிழ் ஒருங்குகுறி தட்டச்சு ஓர் அறிமுகம்
தமிழ் ஒருங்குகுறி தட்டச்சு ஓர் அறிமுகம்
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
உதவிப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்-636011.
மின்னஞ்சல்: tamil@parithi.org
அலைப்பேசி: +91-7299397766
இன்றையச்சூழலில் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கணிப்பொறியோடு தொடர்புடையவர்களாக இருந்து வருகின்றோம். நாளுக்கு நாள் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் கணிப்பொறி சார்ந்ததாக மேம்பட்டு வருகின்றன. அலைபேசிகள் தற்போது கணிப்பொறியின் பயன்பாடுகளோடு பெருமளவில் சந்தையில் கிடைக்கின்றன. அரசின் மின்னாட்சி (e-governance) செயல்பாடுகளுக்கு கணிப்பொறிகளும் அலைபேசிகளும் பலகைக் கணினிகளும் (Tablet PC) மடிக்கணினிகளும் (Laptop) பெருமளவில் உறுதுணையாக உள்ளன. கணிப்பொறி, அலைபேசி, பலகைக்கணி, மடிக்கணினி ஆகியவற்றில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி உள்ளீட்டைச்செய்வது மிக எளியச்செயல் ஆனால், மேற்குறித்தக் கருவிகளில் தமிழ் உள்ளீட்டை (Tamil Input) ஒருவர் செய்வதற்கு தமிழ் உள்ளீட்டை கற்கவும் பழகவும் வேண்டியுள்ளது. கணிப்பொறி மற்றும் கணிணிச் சார்ந்தக் கருவிகளிலும் அலைபேசியிலும் தமிழ் உள்ளீட்டிற்கு தமிழ் எழுத்துருவை (font) நிறுவினால் (installation) மட்டுமே தமிழில் தட்டச்சு (typing) செய்ய இயலும். கணிப்பொறி மற்றும் கணிணி சார்ந்தக் கருவிகளிலும் அலைபேசியிலும் தமிழ் உள்ளீட்டை தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் (Tamil Unicode Fonts) மிக எளிதாக்கி உள்ளன.
தமிழ்நாட்டு அரசு தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை மட்டுமே அலுவலகச்செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த ஆணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஒருங்குகுறிப் பயன்பாட்டிற்கான வழிகளை இக்கட்டுரை வழங்குகின்றது.
தமிழ் எழுத்துருக்களைத் தரவிறக்கம் செய்யும் இணைப்பு
http://www.tamilvu.org/tkbd/tau_fonts.zip என்னும் இவ்விணைப்பின் வாயிலாக 15 வகையான தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைத் தரவிறக்கி நாம் பயன்படுத்தலாம்.
தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை நம் கணிப்பொறியில் சேர்க்க
உங்களின் கணிப்பொறியின் எழுத்துருக்கள் (fonts) என்னும் அமைப்பில் நீங்கள் தரவிறக்கம் செய்த எழுத்துருக்களை சேர்க்கவும்.
தமிழ் ஒருங்குகுறி விசைப்பலகைகள் (Tamil Unicode keyboard)
தமிழா.காம் (தமிழா) என்னும் இணையத்தின் வாயிலாக்க எ-கலப்பை என்னும் தமிழ் விசைப்பலகையை பின்வரும் இணைப்பின் வழியாகப் பெறலாம். https://github.com/thamizha/ekalappai/releases/download/3.0.4/eKalappai-3.0.4-installer.exe
இ-கலப்பை, (e-Kalappai) இம்மென்பொருளை தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணினியில் நிறுவி (instalation) தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம். இம்மென்பொருளில் தமிழ்99 (Tamil99), தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு (Phonetic), தட்டச்சுப்பொறி(Typewriter), பாமினி (Bamini), இன்ஸ்கிரிப்ட் (Inscript)ஆகிய முறைகளில் தமிழ் ஒருங்குகுறியை உள்ளீடலாம்.
அலைபேசிகளில் தமிழ்த்தட்டச்சினைக் கற்க
https://youtu.be/a_tcrgLOn7s என்னும் இணைப்பின் வாயிலாக தமிழ்99 முறையைக் கற்கலாம்.
குரல் வாயிலாகத் தமிழ்த்தட்டசுக் கற்க
https://youtu.be/ddK-EVTc_J0 என்னும் இணைப்பின் வாயிலாக குரல் உள்ளீட்டின் வழியாக தமிழ் ஒருங்குகுறியில் தமிழைப் பயன்படுத்தலாம்.
தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களின் நன்மைகள்
தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் தமிழ்நாட்டு அரசால் ஏற்பளிக்கப்பட்டவையாகும். தமிழ்99 விசைப்பலகையை தரப்படுத்தியுள்ள தமிழக அரசு, அவ்விசைப்பலகையே தமிழக அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள் தமிழ் இணையப்பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தவை ஆகும். இந்த எழுத்துருக்களைக்கொண்டு கணிப்பொறியில் அனைத்துப்பணிகளையும் செய்யலாம். தமிழில் மின்னஞ்சல் (Tamil emailing)செய்ய, தமிழில் இணையதளங்களை உருவாக்க, தமிழில் சொற்செயலியைச் செயற்படுத்த (word processor), தமிழ்ச்சொற்களை அகரவரிசைப்படுத்த (alphabetical sorting), தமிழில் தேடுபொறியைப் (search engine) பயன்படுத்த, சொற்பிழை நீக்க, சந்திப்பிழைத்திருத்த, நிரலாக்க மொழியாகப் பயன்படுத்த என பல்வேறுநிலைகளில் பயன்படுத்தலாம்.
தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள் (Tamil Unicode software)
தமிழ் ஒருங்குகுறி எழுதிகள்/ விசைப்பலகைகள் என்னும் இம்மென்பொருட்கள் கணினிகளில் ஒருங்குகுறி தமிழ் உள்ளீட்டிற்காக உருவாக்கப்பெற்றுள்ள மென்பொருட்கள் ஆகும். இந்த மென்பொருட்களை மிக எளிதாக கணினியில் நிறுவலாம். கணிப்பொறிகளிலும், மடிக்கணினிகளிலும் ஒருங்குகுறி தமிழில் தட்டச்சு செய்ய பின்வரும் மென்பொருள்களுள் ஒன்றினைத் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணினியில் நிறுவி (installation) தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம்.
என்ஹெச்எம் ரைட்டர், (NHM Writer) இம்மென்பொருளைத் https://indiclabs.in/products/writer/ என்னும் இணைப்பில் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணினியில் நிறுவி (instalation) தமிழ்99, தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு (transliteration), தமிழ் பழைய தட்டச்சுப்பொறி (Old typewriter), பாமினி, தமிழ் இன்ஸ்கிரிப்ட் (Inscript), தமிழ்99 டேஸ், தமிழ் ஒலிபெயர்ப்பு டேஸ் (TACE) ஆகிய முறைகளில் தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம்.
தமிழ் விசை (Tamil Visai) இம்மென்பொருளை https://www.microsoft.com/en-us/p/tamil-visai/9wzdncrdf11m?activetab=pivot:overviewtab என்னும் இணைப்பில் தரவிறக்கம் (download) தமிழ் ஒருங்குகுறியில் தட்டச்சுசெய்யப் பயன்படுத்தலாம்.
தமிழ்99 விசைப்பலகையைக் கற்க
டபல்யூ3தமிழ் ,(w3tamil)என்னும் இம்மென்பொருள் https://wk.w3tamil.com/என்னும் இணைப்பில் பயன்படுத்தலாம். ஒருங்குகுறித்தமிழை தமிழ்99 என்னும் விசைப்பலகை முறையை மட்டும், வலைத்தளத்தில் தட்டச்சு செய்துபழகும் வகையில் நேரலை விசைப்பலகையை வடிவமைத்துள்ளது. இவ்வலைதளத்தை தட்டச்சுப்பயிற்சிக்குப் பயன்படுத்தலாம்.
தமிழ் எழுத்துரு மாற்றிகள் (Tamil Unicode converters)
தமிழ் எழுத்துரு மாற்றிகள் என்பது மரபார்ந்த தமிழ் எழுத்துருக்களை தமிழ் ஒருங்குகுறியாகவும், தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை மரபார்ந்த எழுத்துருக்களாகவம் மாற்றப்பயன்படும் மென்பொருட்கள் ஆகும்.
பொங்கு தமிழ் வலைதளத்தில் இண்டோவேர்டு (Indoweb), முரசொலி (Murasoli), வெப் உலகம் (Webulagam), தினத்தந்தி (Thinathanthi), தினமணி (Dinamani), தினபூமி (Thinaboomi), அஞ்சல்(Anjal), தட்ஸ் தமிழ் (Thatstamil)(LIBI), அமுதம்(Amudham/Dinakaran), மயிலை(Mylai), விகடன் (Vikatan(old)), டேப் (Tab), டேம்(Tam)குமுதம்/ விகடன் (kumudam/vikatan) பாமினி (Bamini), டிஎஸ்சி (TSC), ரோமனைஸடு (Romanised), கோல்ன்(koeln), அனு கிராபிக்ஸ் (anu Graphics (Pallavar)), நக்கீரன் (nakkeeran(senthamizh)) ஆகிய எழுத்துருக்களை ஒருங்குகுறித்தமிழில் எழுத்துரு மாற்றம் செய்யலாம்; இதனால் மரபான எழுத்துருக்களை ஒருங்குகுறியில் மாற்றி பல வகைகளில் இந்த பனுவல்களாகப் பயன்படுத்தலாம்.
என்ஹெச்எம் கன்வெர்ட்டர் (NHM Converter) என்னும் இம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, அவதை கணினியில் நிறுவினால் பாமினி, டையகிரிடிக், ஸ்ரீலிபி, சாஃப்ட்வியூ, டேப், டேம், திசுகி, ஒருங்குகுறி, வானவில் ஆகிய எழுத்துருக்களை தமிழ் ஒருங்குகுறியிலும் தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை பாமினி, டையகிரிடிக், ஸ்ரீலிபி, சாஃப்ட்வியூ, டேப், டேம், திசுகி, ஒருங்குகுறி, வானவில் ஆகிய எழுத்துருக்களாகவும் மாற்ற இயலும்.
தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களைத் தரவிறக்கம் செய்ய
தமிழ் நாடு மின்னணுக்கழகம் வழங்கும் தமிழ் எழுத்துருக்கள்
தேசியத் தகவலியல் நடுவம் வழங்கும் தமிழ் எழுத்துருக்கள்
தெற்காசிய மொழிவள நடுவம் வழங்கும் தமிழ் எழுத்துருக்கள்
தமிழ் ஒருங்குகுறி எழுத்துக்கூடம் வழங்கும் தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்கள்
அலைபேசியில் தமிழ் உள்ளீட்டிற்கு (Tamil input for mobile phones)
செல்லினம் (Sellinam) அண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள அலைபேசியில் தரவிறக்கம் செய்து நிறுவி settings-இல் மொழி மற்றும் உள்ளீடு (Languaguage and Input) என்னும் விருப்பத்தேர்வில் தமிழ் விசை என்று தெரிவு செய்தால் அலைபேசியின் விசைப்பலகையில் தமிழ்99, தமிழ் ஒலிபெயர்ப்பு, தமிழ் ஒலிபெயர்ப்பு (ஆங்கில எழுத்துக்கள்) ஆகிய முறைகளில் தமிழை உள்ளிடலாம். சொற்களைக் கோக்கும் போது, அந்தச் சொற்களுக்கு ஏற்றப் பரிந்துரைப் பட்டியலின் (suggestion list) தோற்றம் அஞ்சல் மற்றும் கையடக்கத் தமிழ்-99 விசைப்பலகை அமைப்பைக் கொண்ட உள்ளீட்டு முறை மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்துச் செயலிகளிலும் நேரடியாகத் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பரிந்துரைப் பட்டியலுடன் உள்ளிடும் வசதி – இதன் வழி கருவியின் முதன்மை உள்ளீட்டு முறையாக செல்லினம் அமையும் வாய்ப்பு ஆகியன உள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கிண்டாஷ் கணினிகளில் மட்டும் அல்லாது, ஐ-போன், ஐ-பேட், ஐ-பாட் டச் மற்றும் ஆப்பிள்-டிவி கருவிகளிலும் முரசு அஞ்சலில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனோடு, எச்.டி.சி. நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் அவர்களின் (ஆண்டிராய்டு வகை) கையடக்கக் கருவிகளிலும் முரசு அஞ்சலின் எழுத்துருக்களும் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளுக்கான உள்ளீட்டு முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
செல்லினத்தின் கூறுகள் சில கையடக்கக் கருவிகளில் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளது. எச்.டி.சி. (Tamil input in HTC mobiles) நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எசின் (iOS 7) ஏழாம் பப்பிலும் "முரசு அஞ்சல்", "தமிழ் 99" ஆகிய இரண்டு தமிழ் விசைமுக அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.ஒ.எசில் இயங்கிய செல்லினத்தைக் கொண்டு மற்றச் செயலிகளில் நேரடியாகத் தமிழில் உள்ளிட இயலவில்லையே என்ற குறையை ஐ.ஒ.எசின் ஏழாம் பதிப்பு நீக்கியுள்ளது.
தமிழ் விசையை (Android TamilKey) அண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள அலைபேசியில் தரவிறக்கம் செய்து நிறுவி settings-இல் மொழி மற்றும் உள்ளீடு (Languaguage and Input) என்னும் விருப்பத்தேர்வில் தமிழ் விசை என்று தெரிவு செய்தால் அலைபேசியின் விசைப்பலகையில் தமிழ்99, தமிழ் ஒலிபெயர்ப்பு ஆகிய முறைகளில் தமிழை உள்ளிடலாம்.
ஜிபோர்டு வாயிலாகத் தமிழ் உள்ளீடு:
ஜி போர்டு என்னும் செயலியின் வாயிலாக கையில் எழுதுதல், குரல் உள்ளீடு வாயிலாகத் தமிழில் உள்ளீடு செய்யலாம்.
Dr. Thamizhpparithi Maari | tamil@parithi.org | 7299397766
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுதல்
இரண்டுநாள் பயிலரங்கம்
#விக்கிப்பீடியாவில்_கட்டுரை_எழுதுதல்
நாள்: 14.08.21 & 15.08.21
நேரம்: மாலை 6.00 மணி
இணைப்பு
வாய்ப்புள்ளோர் இணைக!
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021
கட்டற்ற மென்பொருள் நிறுவல் பயிலரங்கம்
![]() |
தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் நிதியுதவி திட்டத்தின் மூலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி-கணித்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் பயிலரங்கம் "தலைப்பு: கட்டற்ற மென்பொருள் நிறுவல்
" நாள்: 06.08.2021 (வெள்ளிக்கிழமை)
நேரம்: பிற்பகல் 3.30 மணி வாய்ப்புள்ளோர்
இந்நிகழ்வில் பங்கேற்க விழைகின்றேன்.
இவண்,
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
உதவிப் பேராசிரியர் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை
பெரியார் பல்கலைக்கழகம் சேலம்-636011
கூகுள் இணைப்பு: https://meet.google.com/
புதன், 4 ஆகஸ்ட், 2021
தமிழ்ப்பேழை - தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம்
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் பயிலரங்கம்
![]() |
Thamizhpparithi Maari |
பண்ணாரி
அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி-கணித்தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் தொடர்
பயிலரங்கில் தமிழ் குறுஞ்செயலி உருவாக்கப்பயிற்சியை இன்று அளிக்க உள்ளேன்.
வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.
நாள்: 04.08.2021 (புதன் கிழமை)
நேரம் பிற்பகல் 3.00 மணி
Google meet link: https://meet.google.com/
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூயில் மாணவர்களுக்கான கணித்தமிழ்ப்பயிற்சி
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூயில் மாணவர்களுக்கான கணித்தமிழ்ப்பயிற்சியை இன்று பிற்பகல் 3 மணியளவில் அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க அழைக்கின்றேன்.
![]() |
Thamizhpparithi Maari |
திங்கள், 2 ஆகஸ்ட், 2021
மாணவர்கள் கணித்தமிழ் ஆய்வினை முன்னெடுக்க உறுதுணை
31.07.2021 அன்று பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் கணித்தமிழ்ப்பேரவையின் சார்பில் நிகழ்ந்த பயிலரங்கில் மாணவர்கள் கணித்தமிழ் ஆய்வினை முன்னெடுக்க உறுதுணை என்னும் தலைப்பில் உரையாற்றினேன்
வியாழன், 29 ஜூலை, 2021
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, கணித்தமிழ் பேரவை நிகழ்வுகள்
ஞாயிறு, 18 ஜூலை, 2021
முனைவர் இரா. பாவேந்தன் நினைவு விருது அறிவிப்பு
முனைவர் இரா. பாவேந்தன் (13 ஏப்ரல், 1970 - 20 சூலை, 2019)
அறிவியல் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் இறுதிவரைப் பாடுபட்ட அறிவியல் தமிழ் அறிஞர், முனைவர் இரா. பாவேந்தன். அனைத்துத் துறைகளிலும் தமிழ் மேன்மையுற வேண்டும் அதிலுங்குறிப்பாக அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்து தமிழ் பீடுற வேண்டும் என்று உழைத்திட்டவர்; இவரின் அறிவியல் தமிழ்க்கனவைச் செயலாக்கும் வகையில் 2021முதல் அவரின் நினைவு நாளன்று அறியல் தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆய்வாளர் ஒருவருக்கு "அறிவியல் தமிழ்ச்சுடர்" என்னும் விருதினை அளித்திட இவரின் தங்கை மருத்துவர் இரா. இளவஞ்சி அவர்கள் அளிக்க உள்ளார்.
• "அறிவியல் தமிழ்ச்சுடர்" விருதுடன் ரூ. 10 ஆயிரம் வழங்கப்பெறும்.
• அறிவியல் தமிழை வளப்படுத்தும் பணிகளை மேற்கொண்டோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
• அறிவியல் தமிழ் நூல்களை எழுதியவர்கள், அறிவியல் தமிழ் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்கள், அறிவியல் தமிழ் சார்ந்த பரப்புரைப்பணிகளை மேற்கொண்டவர்கள், கணித்தமிழின் மேம்பாட்டிற்கு உழைத்தவர்கள், கணித்தமிழ் பரப்புரைகளை முன்னெடுத்தவர்கள் ஆகியோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
• இவ்விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களைப்பற்றிய விவரங்களையும் அறிவியல் தமிழ் சார்ந்த செயற்பாடுகளின் விவரங்களையும் அதற்குரிய ஆவணங்களின் படிகளையும் vanjidr1976@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்
• விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.07.2021.
• ஐயங்களுக்கு +91-7299397766 எனும் எண்ணில் அழைக்கலாம்.